உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மந்தைவெளி பேருந்துகள் புறப்படும் இடம் மாற்றம்

மந்தைவெளி பேருந்துகள் புறப்படும் இடம் மாற்றம்

சென்னை, சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம், வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக மாற்றும் பணி துவங்க உள்ளதால், அங்கிருந்து புறப்பட வேண்டிய பேருந்துகள் வெவ்வேறு இடங்களில் இருந்து நாளை முதல் இயக்கப்பட உள்ளது. தடம் எண்: 21, 41 டி, எஸ் 17, 49 கே, எஸ் 5 பேருந்துகள், மந்தைவெளி எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் தடம் எண்: 49 எப் பேருந்து, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும், தடம் எண்:12 எம், 5 பி ஆகிய பேருந்துகள், லஸ் கார்னர் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும். மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழங்கப்படும் என, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி