உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்

 செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்

குன்றத்துார்: சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, கடந்த மாதம் 21ம் தேதி நிரம்பியதையடுத்து, உபரி நீர் திறக்கப்பட்டது. மழை நின்றதையடுத்து, இம்மாதம் 21ம் தேதி ஏரியில் திறந்துவிடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. 'டிட்வா' புயல் காரணமாக, கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, வினாடிக்கு 3,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. எதிர்பார்த்தபடி மழை பெய்யாததால், நேற்று காலை உபரிநீர் வெளியேற்றம், 250 கன அடியாக குறைக்கப்பட்டது. அதன்பின், நேற்று மாலை உபரிநீர் வெளியேற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி