உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பகிங்ஹாம் கால்வாயில் ரசாயன கழிவு கலப்பு?

பகிங்ஹாம் கால்வாயில் ரசாயன கழிவு கலப்பு?

திருவொற்றியூர்: பகிங்ஹாம் கால்வாய் வழியாக, ரசாயன கழிவு கலக்கும் சம்பவம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவொற்றியூர், குப்பைமேடு துவங்கி எண்ணுார் முகத்துவாரம் வரையிலான பகிங்ஹாம் கால்வாய் வழியாக, சுத்திகரிக்கப்படாத மஞ்சள் நிற ரசாயன கழிவுகள், ஆயில் கழிவுகள் கலப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று காலை திருவொற்றியூர், வி.பி.நகர் அருகே உள்ள பகிங்ஹாம் கால்வாயில், மஞ்சள் நிற நுரையுடன் கூடிய ரசாயன கழிவுகள் கலந்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது. இதன் மூலம், எண்ணுார் முகத்துவாரத்தில் மீன்களின் இனபெருக்கம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என, மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த, 2023ல், மிக்ஜாம் புயலின்போது, தொழிற்சாலைகளின் எண்ணெய் கழிவுகள் பகிங்ஹாமில் கலந்த விவகாரத்தை தொடர்ந்து, அடிக்கடி ரசாயன கழிவுகள் கலக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் இல்லை. தனிமனிதர்களால், லாரிகளில் கொண்டு வந்து, பகிங்ஹாம் கால்வாயில் கொட்டிச் செல்வதாக குற்றச்சாட்டும் உள்ளது. ஆனாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நீர்வளத்துறை இந்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை