உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை - அந்தமான் விமானம் ரத்து

சென்னை - அந்தமான் விமானம் ரத்து

சென்னை;சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட விமானம், அந்தமானில் ஏற்பட்ட வானிலை சூழல் காரணமாக, மீண்டும் சென்னைக்கு திரும்பியது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்லும் 'ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், நேற்று காலை 7:25 மணிக்கு புறப்பட்டது. இதில் 180 பயணியர் பயணித்தனர். விமானம், அந்தமான் வான்வெளியை நெருங்கியபோது, அங்கு மோசமான வானிலை நிலைவியது. இதனால், விமானம் தரையிறக்குவதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து விமானி, சென்னைக்கு விமானத்தை திருப்பினார். காலை 11:40 மணிக்கு, சென்னைக்கு வந்து தரையிறங்கியது. பயணியர் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் மாலை புறப்படும் என, அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், அந்தமானில் வானிலை சூழல் சரியாகவில்லை. இதையடுத்து, அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்தது. பயணியர், ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மாற்று விமானத்தில் இன்று மதியம் அந்தமானுக்கு அழைத்து செல்லப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானத்தில் புகைப்பிடித்த பயணி போலீசில் ஒப்படைப்பு குவைத்தில் இருந்து இண்டிகோ பயணியர் விமானம், 164 பேருடன் நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டது. விமானத்தில், தமிழகத்தை சேர்ந்த ராஜா, 32, என்பவர் பயணம் செய்தார். இவர், விமான கழிப்பறைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இவரிடம் சிகரெட் வாசமும் வீசியுள்ளது. இதையடுத்து, விமான பணிப்பெண்கள் ராஜாவிடம் விமானத்தில் புகைப்பிடிப்பது சட்டவிரோதம் என தெரிவித்துள்ளனர். அதை கண்டுகொள்ளாத ராஜா, மீண்டும் புகைப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விமானியிடம் பணிபெண்கள் தகவல் தெரிவித்தனர். விமானம் சென்னையில் தரையிறங்கியதும், சிகரெட் மற்றும் லைட்டர் ஆகியவற்றுடன் ராஜாவை பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி