மேலும் செய்திகள்
தென் மாநில தடகள போட்டி; சென்னை வீரர்கள் அசத்தல்
28-Sep-2025
தென் மாநில தடகள போட்டி சென்னை வீரர்கள் அசத்தல்
28-Sep-2025
சென்னை:தேசிய தடகள போட்டிக்கு சென்னை வீராங்கனையர் இருவர் தகுதி பெற்றனர். இந்திய தடகள சங்கம் சார்பில் 40வது ஓபன் தேசிய ஜூனியர் தடகள போட்டி, ஒடிஷா வின் புவனேஸ்வரில் வரும் 10ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. இதில், நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்கும் தமிழக அணியில், சென்னையின் மலை ஸ்போர்ட்ஸ் அகாடமியின் ஸ்ரீலேகா மற்றும் இனியா தகுதி பெற்றுள்ளனர். இதற்கு முன் நடந்த தென் மாநில தடகள போட்டியில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான குண்டு எறிதல் போட்டியில், ஸ்ரீலேகா வெண்கல பதக்கமும், 14 வயதுக்கு உட்பட் டோருக்கான டிரையாத்தலான் போட்டியில் இனியா வெள்ளி பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.
28-Sep-2025
28-Sep-2025