மேலும் செய்திகள்
சென்னை வீராங்கனையர் மாநில தடகளத்தில் அசத்தல்
09-Oct-2025
சென்னை:சென்னையில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் சென்னை மற்றும் செங்கல்பட்டு வீரர்கள் பதக்கங்கள் வென்று அசத்தினர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவில் கல்லுாரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் வளாகத்தில் நடந்தது. இதன் இறுதி நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், சென்னை மற்றும் செங்கல்பட்டு வீரர் - வீராங்கனையர் 15க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அவற்றில் சில போட்டிகளில், முதல் மற்றும் இரண்டாம் இடங்கள் பிடித்த மாணவர்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீச்சல் - மாணவர் பிரிவு __________________ போட்டி தங்கம் வெள்ளி 400 மீ., ஐ.எம்., பிரவீன் குமார் - சென்னை ராஜ் செந்தில் குமார் - செங்கல்பட்டு 100 மீ., பேக் ஸ்டோர்க் நிதிக் நாதெல்லா - செங்கல்பட்டு பிரவீன் குமார் - சென்னை 200 மீ., பட்டர் பிளை கவீன் ராஜ் - செங்கல்பட்டு சாய் கணேஷ் - சென்னை 100 மீ., பிரஸ்ட் ஸ்டோர்க் யாதேஷ் பாபு - செங்கல்பட்டு அன்பு கதிர் -சென்னை 50 மீ., ப்ரி ஸ்டைல் ஜோசுவா தாமஸ் - சென்னை யாதேஷ் பாபு - செங்கல்பட்டுநீச்சல் - மாணவியர் பிரிவு ----------------------- போட்டி தங்கம் வெள்ளி 100மீ., பேக் ஸ்டோர்க் அர்ச்சனா - நெல்லை லக்ஷிதா - சென்னை 200மீட்., பட்டர் பிளை தனுஜா - திருச்சி மோனிகா -சென்னை 100மீட்., பிரஸ்ட் ஸ்டோர்க் ஜாய்ஸ்ரீ - சென்னை சஹாயா ரான்ஸ் - நெல்லை 50 மீட்., ப்ரி ஸ்டைல் பாலா பொன்னி - சென்னை இனியா ஆல்பர்ட் - நெல்லை
09-Oct-2025