உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டெங்கு காய்ச்சல்: மாநகராட்சி உஷார்

டெங்கு காய்ச்சல்: மாநகராட்சி உஷார்

சென்னை : டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்க மாநகராட்சி பள்ளிகளில், கொசு மருந்து அடிப்பது தொடங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும், 'எய்டஸ்' என்ற கொசு பகல் நேரங்களில் மட்டுமே கடிப்பதால், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. குறிப்பாக, சிறுவர்களுக்கு இந்த கொசுவால் உடனே காய்ச்சல் ஏற்படும் என்பதால், மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கொசு மருந்து அடிக்கப்படுவதாக சுகாதார அலுவலர் குகாநந்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, ''மாநகராட்சி பகுதியில் உள்ள 310 மாநகராட்சி பள்ளிகளிலும், 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிலும், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் 'எய்டஸ்', கொசுவை அழிக்க கொசு மருந்து அடிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார். மேலும், பள்ளிகளை சுற்றிலும், கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்குவதை தடுக்கவும், மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ