உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்னை டான் போஸ்கோ பள்ளி அணி மாநில கால்பந்து பைனலில் ஏமாற்றம்

 சென்னை டான் போஸ்கோ பள்ளி அணி மாநில கால்பந்து பைனலில் ஏமாற்றம்

சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான மாநில கால்பந்து போட்டியில், சென்னை டான் போஸ்கோ அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பள்ளிக்கல்வித்துறை, திருச்சி மாவட்டம் சார்பில், 2025ம் ஆண்டிற்கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, மாநில பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், திருச்சி மாவட்ட அரசு கால்பந்து மைதானத்தில் நடந்தன. இதில், தமிழகத்தின் 38 மாவட்ட அணிகள் மற்றும் 2 எஸ்.டி.ஏ.டி., விடுதி அணிகள் என, மொத்தம் 40 அணிகள் மோதின. போட்டி முழுதும் நாக் - அவுட் முறையில் நடந்தது. இதன் காலிறுதி போட்டியில், டான் போஸ்கோ அணி, செங்கல்பட்டு மாவட்ட அணியை, 4 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதி போட்டியில் திருவள்ளூர் அணிக்கு எதிராக, 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில், சென்னை டான் போஸ்கோ அணி, தஞ்சாவூர் அணியை எதிர்த்து களம் இறங்கியது. விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு அணிகளும் 1 - 1 என சமனில் ஆட்டம் முடிந்ததால், டை-பிரேக்கர் சுற்றுக்கு ஆட்டம் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து நடந்த பெனால்டி ஷூட்-அவுட்டில் தஞ்சாவூர் அணி. 4-2 என்ற கோல் கணக்கில், டான் போஸ்கோ அணியை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தது. அதிர்ச்சி தோல்வி அடைந்த சென்னை அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை