மேலும் செய்திகள்
தேசிய தடகள போட்டிக்கு சென்னை வீராங்கனையர் தகுதி
01-Oct-2025
சென்னை, மதுரையில் மாநில அளவில் நடந்த தடகள போட்டிகளில், சென்னையின், பாடி அகாடமி வீராங்கனையர் சுபதர்ஷினி மற்றும் அக் ஷிதா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மே ம்பாட்டு ஆணை யம் சார்பில், மாநில அளவிலான கல்லுாரி மாணவ - மாணவியருக்கான தடகள போட்டி, மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு திடலில் நடந்தது. 1,000க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பாடி அ காடமி வீராங்கனையர், பெண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், சுபதர்ஷினி 23.96 வினாடிகளில் போட்டி துாரத்தை கடந்து, தங்கம் வென்றார். 100 மீட்டர் தடை ஓட்டத்தில், சென்னையின் அக் ஷிதா 14.11 விநாடிகளில் போட்டி துாரத்தை கடந்து, வெள்ளி பதக்கம் வென்றார்.
01-Oct-2025