சென்னை - கோவா தினசரி விமான சேவை ஏப்.,15ல் துவக்கம்
சென்னை, சென்னையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் தினசரி நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. டிக்கெட் தீர்ந்து விட்டால். பலரும் வேறு வழியின்றி மற்ற நகரங்களுக்கு சென்று கோவாவுக்கு செல்வர். எனவே கூடுதல் விமான சேவைகள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணியர் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து கோவாவுக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 15ம் தேதி முதல் துவங்குகிறது.சென்னையில் இருந்து தினசரி மாலை 6:55 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 8:35 மணிக்கு கோவா சென்றடையும்.கோவாவில் இருந்து மாலை 4:40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6: 20 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த மார்க்கத்தில் ஏர்பஸ் 320 வகை விமானங்கள் இயக்கப்பட உள்ளன.முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களை www.airindiaexpress.comஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.***