உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரேட்டர் சென்னையில் 44.4 லட்சம் வாக்காளர்கள்

கிரேட்டர் சென்னையில் 44.4 லட்சம் வாக்காளர்கள்

சென்னை : உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கிரேட்டர் சென்னைக்கான வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதில், 44.40 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது: சென்னை மாநகராட்சி, 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்து, 424 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. 42 உள்ளாட்சி அமைப்புகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 155 வார்டுகள், 200 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, இப்பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில், 44.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 22.42 லட்சம். பெண் வாக்காளர்கள் 22.06 லட்சம். மற்றவர்கள் 364 பேர். இப்பட்டியல், பொது மக்களின் பார்வைக்காக, சென்னை மாநகராட்சி அலுவலகம், 10 மண்டல அலுவலகங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி களில் உள்ள நகராட்சி மற்றும் போரூராட்சி அலுவலகங்களில் வைக்கப்படும். மாநகராட்சி இணையதளத்திலும், இது வெளியிடப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்காக, கிரேட்டர் சென்னை பகுதிகள், 4,776 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படும். இதில், பெண்கள் மற்றும் ஆண்கள் ஓட்டுச் சாவடிகள், தலா 1,384, பொது ஓட்டுச் சாவடிகள் 2,108. தேர்தல் பணியில் 27 ஆயிரம் பேர்: மாநகராட்சிக்கான தேர்தல் பணியில், 27 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுக்கான பயிற்சி, விரைவில் தொடங்கும். உள்ளாட்சித் தேர்தலில், மின்னணு ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்காளர் மேயருக்கும், மாநகராட்சி உறுப்பினருக்கும் என, இரண்டு வாக்குகளைச் செலுத்த வேண்டும். இதற்காக, இரண்டு தனித்தனி மின்னணு ஓட்டு எந்திரங்கள், ஓட்டுச் சாவடியில் அமைக்கப்பட்டிருக்கும். மொத்தம், 10 ஆயிரம் மின்னணு ஓட்டுஎந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை