உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்னை ஓபன் செஸ் வரும் 2ம் தேதி துவக்கம்

 சென்னை ஓபன் செஸ் வரும் 2ம் தேதி துவக்கம்

சென்னை: சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி, எழும்பூரில் ஜன., 2ம் தேதி துவங்க உள்ளது. தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், 'சக்தி' குழுமத்தின் என்.மகாலிங்கம் நினைவு கோப்பைக்கான சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி, ஜன., 2ம் தேதி எழும்பூரில் துவங்க உள்ளது. போட்டியில், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா உட்பட 22 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர். இதில், 13 கிராண்ட் மாஸ்டர், 23 சர்வதேச மாஸ்டர், ஒரு மகளிர் கிராண்ட் மாஸ்டர், ஐந்து பிடே மாஸ்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். முதலிடம் பிடிப்போருக்கு 4 லட்சம்; இரண்டாமிடத்திற்கு 3 லட்சம்; மூன்றாம் இடத்திற்கு, 1.75 லட்சம் ரூபாய் என, மொத்தம் 20 லட்சம் ரூபாய் ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை