சென்னை பெட்ரோலியம் ஆர்.சி., அணி டிவிஷன் கிரிக்கெட்டில் சாம்பியன்
சென்னை,திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் நடந்து வருகின்றன.இதில், நான்காவது டிவிஷன் ஆட்டத்தில், மொத்தம் எட்டு அணிகள், இரு குழுவாக பிரிக்கப்பட்டு, 'லீக்' மற்றம் 'பிளே ஆப்' முறையில் மோதின.அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை பெட்ரோலியம் ஆர்.சி., மற்றும் ஸ்டேக் சி.சி., அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த, சென்னை பெட்ரோலியம் அணி, 30 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 180 ரன்களை அடித்தது. எதிர் அணியின் வீரர் ராமசாமி, 38 ரன்களை கொடுத்து, ஐந்து விக்கெட் எடுத்தார்.அடுத்து பேட்டிங் செய்த, ஸ்டேக் சி.சி., அணி, 25.1 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 55 ரன்கள் வித்தியாசத்தில், சென்னை பெட்ரோலியம் அணி வெற்றி பெற்று, 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.நான்காவது டிவிஷன் ஒட்டுமொத்த போட்டியில், ஸ்டேக் சி.சி., வீரர் விக்னேஷ் அதிகப்படியாக, 215 ரன்களும், அதே அணியின் வீரர் ராமசாமி அதிகப்படியாக, 16 விக்கெட்களை எடுத்து சாதனை படைத்தனர்.