உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / யு-14 தேசிய டென்னிஸ் போட்டி சென்னை வீராங்கனையர் அசத்தல்

யு-14 தேசிய டென்னிஸ் போட்டி சென்னை வீராங்கனையர் அசத்தல்

சென்னை:அகில இந்திய டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய ஏ.ஐ.டி.ஏ., டென்னிஸ் தொடரை, சென்னையில் நடத்தியது.இதில், மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், சென்னையின் கனிஷ்கா, மற்றொரு சென்னை வீராங்கனையான வசூதாவை எதிர்த்து மோதினார். இதில் வசூதா 7 - 5, 6 - 1 என்ற நேர் செட்டில் கனிஷ்காவை வீழ்த்தினார்.இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், கனிஷ்கா, டஸ்நிம் ஜோடி, இனியா, தியா ஜோடியை எதிர்த்து மோதியது. இதில் கனிஷ்கா, டஸ்நிம் ஜோடி 6 - 2, 6 - 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.l ஹரியானா, கோஹானாவில் அகில இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் நடந்த 18 வயதுக்கு உட்பட்ட மகளிர் தேசிய டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில், ஹரியானாவின் அலெக்ஸா சிங்கை எதிர்த்து, சென்னையின் தனுஸ்ரீ மோதினார். இதில், 6 - 1, 6 - 0 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அனைவருக்கும், கோப்பைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி