டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி சென்னை துறைமுக அணி வெற்றி
சென்னை, டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், சென்னை துறைமுகம் அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில், காந்தி நகர் ஸ்டார்லெட்ஸ் அணியை தோற்கடித்தது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்தி வருகிறது. ஐந்தாவது டிவிஷன் 'ஏ' மண்டல போட்டியில், முதலில் பேட்டிங் செய்த, காந்தி நகர் ஸ்டார்லெட்ஸ் அணி, 50 ஓவர்களில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 266 ரன்களை எடுத்தது.அடுத்து பேட்டிங் செய்த சென்னை துறைமுகம் அணி, 49.3 ஓவர்களில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 267 ரன்களை எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், விக்னேஷ்வரா சி.சி., அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 194 ரன்களை எடுத்தது.அடுத்து பேட்டிங் செய்த, பாரத் பெட்ரோலியம் அணி, 42.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 186 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. விக்னேஷ்வரா அணி வீரர், கிஷோர் ஆறு விக்கெட் எடுத்து, 63 ரன்களை கொடுத்தார். அசோக் லேலண்ட் அணி, 26.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 128 ரன்களை எடுத்தது. எதிர் அணியின் வீரர் பால்ராஜ் சிங், ஐந்து விக்கெட் எடுத்து, 33 ரன்களை கொடுத்தார். அடுத்து களமிறங்கிய, தாம்பரம் ஐ.ஏ.எப்., அணி, 28 ஓவர்களில் ஆறு விக்கெட் எடுத்து, 129 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.