உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை, செங்கை சிறுவர்கள் மாநில சதுரங்கத்தில் அசத்தல்

சென்னை, செங்கை சிறுவர்கள் மாநில சதுரங்கத்தில் அசத்தல்

சென்னை ஜி.கே.எம்., கல்விக்குழுமம், ஸ்ரீ ஹயக்ரிவர் சதுரங்க அகாடமி இணைந்து, மாநில அளவிலான சதுரங்க போட்டியை, பெருங்கொளத்துாரில் உள்ள ஜி.கே.எம்., கல்லுாரியில், இரு தினங்களுக்கு முன் நடத்தியது.போட்டியில், 8, 10, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட்டோருக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. சுவிஸ் அடிப்படையில், பிடே விதிப்படி போட்டிகள் நடந்தன. அனைத்து சுற்றுகள் முடிவில், 8 வயது பிரிவில், காஞ்சிபுரத்தை சேர்ந்த யாஷிகா, சிறுவரில் சென்னையை சேர்ந்த ரேயன்ஷ் குமார் ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.சிறுமியரில் 10 வயது பிரிவில், சென்னை மைத்ரேயி, சிறுவரில் சென்னை லார்ஷன்; 13 வயதில் ராணிப்பேட்டை திவ்யாஸ்ரீ, சென்னை ரித்திக்ராஜா ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர்.அதேபோல், 25 வயது பிரிவில், சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி, செங்கல்பட்டை சேர்ந்த ரிஷி ஆகியோர் முதலிடத்தை வென்றனர். மேலும், ஒவ்வொரு பிரிவிலும் தலா 30 பேருக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை