உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி சென்னை மாணவிக்கு வெள்ளி

தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி சென்னை மாணவிக்கு வெள்ளி

சென்னை மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில், சென்னை வீராங்கனை ஆனந்தி மிஷ்ரா வெள்ளி பதக்கம் வென்றார். சாத்வி ப்ரீதிசுதாஜி இன்டர்நேஷனல் பள்ளி சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே, 'தேசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் - 2025' போட்டிகள், மஹாராஷ்டிரா மாநிலம் சீரடியில் நடந்தது. போட்டிகள், 14, 17 வயதுக்கு உட்பட்டோர் என, இரண்டு பிரிவுகளாக நடந்தன. இதில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், 'டேபிள் வால்ட்' பிரிவில், சென்னை வீராங்கனை ஆனந்தி மிஷ்ரா, 10.825 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். தெலுங்கானா மாநிலத்தின் டயானா கிரேஸ், 11.00 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், காரியா அத்காரி, 10.775 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை