உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை வி.ஏ.பி., டிராபி கிரிக்கெட் ஆழ்வார்பேட்டை சி.சி., அணி வெற்றி

சென்னை வி.ஏ.பி., டிராபி கிரிக்கெட் ஆழ்வார்பேட்டை சி.சி., அணி வெற்றி

சென்னை: சென்னையில் நடந்து வரும் வி.ஏ.பி., கோப்பை முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், ஆழ்வார்பேட் கிரிக்கெட் கிளப் அணி, 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், வி.ஏ.பி., கோப்பைக்கான முதல் டிவிஷன் கிரிக்கெட் தொடர், சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது. மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லுாரி மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்த போட்டி யில், ஆழ்வார்பேட்டை கிரிக்கெட் கிளப் மற்றும் மயிலாப்பூர் ரீகிரியேஷன் கிளப் 'ஏ' அணிகள் மோதின. டாஸ் வென்ற மயிலாப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை துவக்கிய ஆழ்வார்பேட்டை அணியின் துவக்க ஆட்டக்காரரான ராம் அரவிந்த், 118 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின் வந்த பத்திரிநாத், 59 ரன்கள் எடுத்து, அணிக்கு வலுச்சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில், ஆழ்வார் பேட்டை அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 271 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மயிலாப்பூர் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஆதிஷ் - 8, சாதுர்வேத் - 19 ரன்கள் என, வந்த வேகத்தில் வெளியேறினர். பின் வந்த கிரண் கார்த்திகேயன், அதிரடியான ஆட்டத்தால், 90 ரன்கள் குவித்தார். அவரை தொடர்ந்து, அனிருத் சீதாராம் - 25, ஷ்யாம் - 24, நிதின் - 47 ரன்கள் எடுத்தனர். முடிவில், மயிலாப்பூர் அணி, 47.3 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 248 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால், ஆழ்வார்பேட்டை அணி, 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆழ்வார்பேட்டை அணி வீரர் முகமது திபியான், ஆறு விக்கெட்டுகளை சாய்த்து, அணியின் வெற்றிக்கு உதவினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ