உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை - விஜயவாடா பினாகினி ரயில் 2 நாள் தாமதமாக புறப்படும்

சென்னை - விஜயவாடா பினாகினி ரயில் 2 நாள் தாமதமாக புறப்படும்

சென்னை, 'சென்னை சென்ட்ரல்- ஆந்திரா மாநிலம்,விஜயவாடா பினாகினி விரைவு ரயில், இரண்டு நாட்களுக்கு, 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், சென்ட்ரல் - ஆந்திரா மாநிலம், விஜயவாடா பினாகினி விரைவு ரயில் வரும் 22, 29ம் தேதிகளில், 45 நிமிடங்கள் தாமதமாக, மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை