ஏழைகள் தாகம் தீர்த்த முதல்வர் ஜெ.எம்.பஷீர் பெருமிதம்
சென்னை தமிழக அரசு சார்பில், சென்னையில் 50 இடங்களில், தானியங்கி கட்டணமில்லா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்களை, நேற்று முன்தினம் முதல்வர் திறந்து வைத்தார். இதுகுறித்து, நடிகரும், தி.மு.க., சிறுபான்மை பிரிவை சேர்ந்தவருமான ஜெ.எம்.பஷீர் அறிக்கை: தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் முதற்கட்டமாக நகரின் முக்கிய பகுதிகளில், 50 இடங்களில், கட்டணம் இல்லா தானியங்கி குடிநீர் இயந்திரத்தை திறந்து வைத்து, முதல் ஆளாக அவரே தண்ணீரை பருகியுள்ளார்.இது, ஏழைகள் மீது முதல்வர் எவ்வளவு அக்கறை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது. தாகத்திற்கு கட்டணமில்லா குடிநீர் தந்து, ஏழைகளின் தாகம் தீர்த்த தலைவராகி உள்ளார். தினமும் பிழைப்பை தேடி 'சுகி, சொமேட்டோ' போன்ற நிறுவனங்களின் உணவு வினியோக பணிகளில் ஈடுபடுவோருக்கு ஏற்கனவே, ஏ.சி., வசதியுடன் கூடிய மையங்களை திறந்து வைத்த அவர், தற்போது சுத்திகரிக்கப்பட்ட, கட்டணமில்லா குடிநீரையும் தாயுள்ளத்தோடு வழங்கி தாயுமானவராகி உள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.