உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துாரில் மண்டபங்கள் முதல்வர் திறப்பு

குன்றத்துாரில் மண்டபங்கள் முதல்வர் திறப்பு

குன்றத்துார்:குன்றத்துாரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் முகூர்த்த நாட்களில், அதிக அளவில் திருமணங்கள் நடக்கும்.அந்நாட்களில் போதிய இடவசதி இல்லாமல் போக்குவரத்து நெரிசலும், திருமணத்திற்கு அனுமதி வழங்குவதிலும், சிரமம் ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில், கோவிலின் பின்பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 2.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆறு திருமண மண்டபங்களை, முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக, நேற்று திறந்து வைத்தார்.கோவிலைச் சுற்றி சுவர், நடைபாதை, பூங்கா அமைக்கப்பட்டு, திருமண மண்டபங்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வரும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி