உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் கோப்பை கூடைப்பந்து 36 பள்ளிகள் பலப்பரீட்சை

முதல்வர் கோப்பை கூடைப்பந்து 36 பள்ளிகள் பலப்பரீட்சை

சென்னை, திருவள்ளூர் மாவட்ட முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில், 13 மாணவியர் அணிகள் உட்பட மொத்தம், 36 பள்ளி அணிகள் மோதுகின்றன. எஸ்.டி.ஏ.டி., சார்பில், அந்தந்த மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் துவங்கியுள்ளன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, சென்னை ஐ.சி.எப்.,யில் நேற்று துவங்கின. இதில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட மாணவரில், 23 பள்ளிகள், மாணவியரில் 13 பள்ளிகளை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்று உள்ளன. மாணவியருக்கான ஆட்டத்தில், வேலம்மாள் மேல் அயனம்பாக்கம் அணி, 30 - 15 என்ற புள்ளி கணக்கில் பொன்னேரி வேலம்மாள் அணியையும், ஆவிச்சி குளோபல் பள்ளி, 24 - 14 என்ற கணக்கில் சேவலாயா பள்ளியையும் தோற்கடித்தன. மற்றொரு ஆட்டத்தில், ஸ்ரீ நிகேதன் பள்ளி, 21 - 15 என்ற புள்ளி கணக்கில் வி.வி.எஸ்., பள்ளியை வீழ்த்தியது. அதேபோல், மாணவருக்கான ஆட்டத்தில் சேவலாயா பள்ளி, 23 - 16 என்ற புள்ளி கணக்கில் ஆதித்யா பள்ளியையும், ஆர்.எம்.கே., பள்ளி 27 - 7 என்ற புள்ளி கணக்கில் டி.எஸ்.ஏ.ஏ., பள்ளியை வீழ்த்தின. போட்டிகள் தொடர்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி