உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியிடம் சில்மிஷம் கடை ஓனருக்கு 3 ஆண்டு

சிறுமியிடம் சில்மிஷம் கடை ஓனருக்கு 3 ஆண்டு

சென்னை, சென்னை, எம்.கே.பி., நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 2021 டிச., 10ல் பெற்றோருடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை, வீட்டின் முதல் மாடியில் உள்ள கடையில் இருந்து சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் விசாரித்ததில், கடையின் உரிமையாளர், தன்னிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது.எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ராமசந்திரன், 43, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா ஆஜரானார்.நீதிபதி, ''குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், ராமசந்திரனுக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.''மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என, தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை