உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர் நேர்மைக்கு பாராட்டு

துாய்மை பணியாளர் நேர்மைக்கு பாராட்டு

அடையாறு, வேளச்சேரியை சேர்ந்தவர் தர்மலிங்கம், 28. மாநகராட்சியில் துாய்மை பணி மேற்கொள்ளும் உர்பேசர் சுமித் நிறுவனத்தில், ஊழியராக பணி புரிகிறார். நேற்று அதிகாலை, சைதாப்பேட்டை பிரதான சாலையில் பணியில் இருந்த போது, சாலையில் ஒரு மொபைல் போன் கிடந்தது.அதை எடுத்து, உரியவரிடம் ஒப்படைக்க, மொபைல் போனை ஓபன் செய்ய முயன்றார். அது லாக் செய்யப்பட்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில், மொபைல் போனை தொலைத்தவரிடம் இருந்து அழைப்பு வந்தது.அவரை நேரில் வரவழைத்து விசாரித்த போது, கோவையை சேர்ந்த விநாயக், 26, எனவும், வேளச்சேரியில் விடுதியில் தங்கி, ரேபிடோ பைக் ஓட்டுவதாகவும் கூறினார்.மேலும், மொபைல் போன் அடையாளங்களை கேட்டு, அவருடையது தான் என உறுதிசெய்த பின், உர்பேசர் சுமித் நிறுவன அலுவலர் பாலாஜி முன்னிலையில், மொபைல் போனை தர்மலிங்கம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ