சுரங்கப்பாதையில் துாய்மைப்பணி
கோடம்பாக்கம்,:- கோடம்பாக்கம் மண்டலத்தில், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை, மாம்பலம் மேட்லி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மேம்பாலம், தி.நகர் மேம்பாலம் உள்ளிட்டவை உள்ளன.சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்களில் உள்ள வெளிப்புற மற்றும் உட்புற சுவர்கள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அசுத்தமாக காட்சியளிக்கின்றன. குப்பை மற்றும் கட்டடக் கழிவுகள் குவிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில், சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்களில் இரவு நேரங்களில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இந்த பணிகள் தொடரும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.