உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 21 இடங்களில் நில வகைபாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,

21 இடங்களில் நில வகைபாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,

சென்னை:சென்னை பெருநகர் பகுதியில், 21 இடங்களில் உரிமையாளர்கள் கோரிக்கை அடிப்படையில், நில வகைபாடு மாற்றம் செய்வது குறித்து, பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது. சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டத்தின் அடிப்படையில், சர்வே எண் வாரியாக நில வகைபாடு விபரங்கள் தொகுக்கப்பட்டன. இதில், பல்வேறு இடங்களில் தவறுகள் இருப்பதாக புகார் எழுந்தது. னால், நில உரிமையாளர்கள் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால், தொழில்நுட்ப வல்லுனர் குழு பரிந்துரை அடிப்படையில் வகைபாடு மாற்றப்படும் என, சி.எம்.டி.ஏ., தெரிவித்தது. இதனால், நில உரிமையாளர்கள் தனித்தனியாக விண்ணப்பித்து, நில வகைபாட்டை மாற்ற கோருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ஆவடி, வண்டலுார், ஆலந்துார், தாம்பரம், சோழிங்கநல்லுார், குன்றத்துார் உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள, 21 இடங்களின் வகைபாடு மாற்றம்கோரி, விண்ணப்பங்கள் வந்துள்ளன.இதில், 10 இடங்களில், விவசாய பயன்பாட்டில் இருந்து, குடியிருப்பு மற்றும் பிற பணிகளுக்கு நில வகைபாடு மாற்றப்பட உள்ளது. பெரும்பாலான விண்ணப்பங்கள், ஆதார குடியிருப்பு, நிறுவனம், வணிக கட்டடங்களுக்காக நில வகைபாடு மாற்ற கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்த விபரங்கள், சி.எம்.டி.ஏ.,வின், www.cmdachennai.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தங்கள் கருத்துகளை பொது மக்கள் அடுத்த, 21 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி