உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடுக்குமாடிகளில் விதிமீறல் விளக்கம் கேட்கும் சி.எம்.டி.ஏ.,

அடுக்குமாடிகளில் விதிமீறல் விளக்கம் கேட்கும் சி.எம்.டி.ஏ.,

சென்னை :சென்னையில் விதிமீறி கட்டப்பட்ட 11 அடுக்குமாடி கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு, சி.எம்.டி.ஏ., 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனும் சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரகாஷ், விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கையும் எடுக்காமல், அமலாக்கத்துறை அதிகாரிகள், 'டம்மி'யாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். விதிமீறல் கட்டடங்களின் புகார்கள் மீது, நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில், பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள் அடிப்படையில், வண்ணாரப்பேட்டை, கோடம்பாக்கம், திருமங்கலம், பழவந்தாங்கல், தி.நகர், மந்தைவெளி, எழும்பூர் மற்றும் கீழ்ப்பாக்கம் பகுதிகளில், கட்டுமான பணி முடிந்த கட்டடங்களில் ஆய்வு செய்தோம்.பயன்பாட்டுக்கு வந்த 11 கட்டடங்களில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.உரிமையாளர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், அந்த கட்டடங்கள் மீது, 'சீல்' வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மற்ற இடங்களிலும் ஆய்வுகள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !