உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மூன்றாவது மாஸ்டர் பிளான் வல்லுனர் தேடும் சி.எம்.டி.ஏ.,

 மூன்றாவது மாஸ்டர் பிளான் வல்லுனர் தேடும் சி.எம்.டி.ஏ.,

சென்னை: சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்க, நகரமைப்பு வல்லுனர்களை தேடும் பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது. சென்னை பெருநகருக்கான இரண்டாவது முழுமை திட்டம் காலாவதியாகி விட்டது. மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கும் பணிகள், 2022ல் துவங்கின. சென்னைக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதாக கூறி, அதில் இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன்படி, 40,000க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர். இதன் அடிப்படையில், 27 தலைப்புகளில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. இந்த அறிக்கைகளை முழுமை திட்ட ஆவணங்களாக மாற்றும் பணிகள் தாமதமாகி உள்ளன. சிறப்பு ஆலோசகர், ஓய்வுபெற்ற சீப் பிளானர் மட்டுமின்றி, 30 பேர் வரை இதற்காக நியமிக்கப்பட்டனர். இருப்பினும், பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடக்கவில்லை. இதனால், முழுமை திட்ட பணிகளுக்காக மேலும், 8 நகரமைப்பு வல்லுனர்களை, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள், பிப்., 12க்குள், www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள இணைப்பு வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி