கல்லுாரி கனவு நிகழ்ச்சி நாளை முதல் துவக்கம்
சென்னை :பிளஸ் 2க்கு பின், என்ன படிக்காலாம் என்ற 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி, நாளை முதல் சென்னையில் நடக்கிறது.சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில், 'நான் முதல்வன்' கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், 'கல்லுாரி கனவு' நிகழ்ச்சி, நாளை முதல் சென்னையில் துவங்குகிறது.நிகழ்வில், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2022 - 23, 2023 - 24ல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, பெறாத, இடைநின்ற, கல்லுாரியில் சேராத, 5,666 மாணவர்களுக்கு, என்ன படிக்கலாம் என்ற ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை பகுதியில் வசிப்போருக்கு, நாளை (14ம் தேதி) கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் முகாம் நடக்கிறது. தொடர்ந்து, அடையாறு, கோடம்பாக்கம் பகுதிக்கு, 16ம் தேதி, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் பீட்ஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் நடக்கிறது.திரு.வி.க., நகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் பகுதிகளுக்கு, 19ம் தேதி, திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் பள்ளி; அண்ணா நகர், ராயபுரம், தேனாம்பேட்டை பகுதிகளுக்கு 20ம் தேதி, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் நடக்க உள்ளன. இந்த தகவலை சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.