மேலும் செய்திகள்
போதையால் தகராறு: நண்பரை கொன்று வாலிபர் 'எஸ்கேப்'
01-Apr-2025
கொடுங்கையூர்,கொடுங்கையூர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பால் யூட்டிக்லாஸ், 20; பிரபல தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், 3ம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று மாலை, வீட்டின் கழிப்பறையில் மயங்கிய நிலையில் இருந்தவரை, குடும்பத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. கொடுங்கையூர் போலீசாரின் விசாரணையில், கடந்த இரு ஆண்டுகளாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட பால் யூட்டிக்லாஸ், தனக்கு தானே ஊசி போட்டு தற்கொலை செய்ததுதெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
01-Apr-2025