உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கல்லுாரி மாணவர் தற்கொலை

 கல்லுாரி மாணவர் தற்கொலை

கோயம்பேடு: கோயம்பேடு அன்னம்மாள் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன், 19. இவர் ராமாபுரம் எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் பி.டெக் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் கல்லுாரியில் இருந்து வீடு திரும்பிய பிரவீன், தனது அறைக்குள் சென்றார். நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பாட்டி கதவைத் தட்டிப் பார்த்துள்ளார். கதவு திறக்காததால் அங்கிருந்தோரின், உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பிரவீன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கோயம்பேடு போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி