உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புது வார்ப்பு தள கூரை பணி துவக்கம்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புது வார்ப்பு தள கூரை பணி துவக்கம்

காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் 96 ஏக்கர் பரப்பு கொண்டது. மீன்பிடி துறைமுகத்தை உலக தரத்தில் மாற்றியமைக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையேற்று, 97.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன.மேலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களை பதப்படுத்தும் வகையில், 'மீன் பதப்படுத்தும் கூடம்' மீன் வலை பழுதுபார்க்கும் கூடங்கள், நாகூரார் தோட்டம் புதிய வார்ப்பு தளம் துவங்கி பழைய மீன் விற்பனை தளம் வரை உள்ள 6 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட உள்ளது.அதுமட்டுமல்லாமல் காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையம் முதல் காசிமேடு துறைமுகம் ஜீரோ கேட் வரை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட 25 திட்டப்பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புதிய வார்ப்பு தளத்தில் கூரை அமைக்கும் பணிக்காக, கடற்பகுதியில் துாண்கள் அமைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது.காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச தரத்தில் நவீனமயமாக்கப்பட உள்ளது. கூடுதல் மீன் இறங்கு தளங்கள், இயந்திரமயமாக்கப்பட்ட மீன் கையாளும் வளாகம், பேக்கேஜிங் மற்றும் குளிர்பதன கிடங்கு, சுகாதார வளாகம், உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது, முதற்கட்ட பணிகள் நடக்கின்றன.- அதிகாரிகள், மீன்வளத் துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ