உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.50,000 மோசடி திருமங்கலம் நபர் மீது புகார்

ரூ.50,000 மோசடி திருமங்கலம் நபர் மீது புகார்

எம்.கே.பி.நகர்,வேலை வாங்கி தருவதாக 50,000 ரூபாய் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வியாசர்பாடியை சேர்ந்த வினோத்குமார், எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார்:வியாசர்பாடி, எம்.கே.பி.நகரில் வசித்து வருகிறேன். எனக்கு திருமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் பழக்கமானார்.கடந்த 2024ல், மணிகண்டன் எனக்கு நெடுஞ்சாலை துறை மற்றும் துறைமுகத்தில் வேலைவாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி, கடந்த 2024, ஆக., 24ம் தேதி, 50,000 ரூபாய் கொடுத்தேன். 10 மாதங்களாகியும், வேலை வாங்கி தராததோடு, பணத்தையும் திருப்பி தராமல் மணிகண்டன் ஏமாற்றினார். பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வேலை வாங்கி தருவதாக, பணம் வாங்கி ஏமாற்றிய மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எழும்பூர், 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், வினோத்குமார் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி எம்.கே.பி.நகர் போலீசார், நேற்று மணிகண்டன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ