உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி - நடைபாதையில் விபத்து அபாய மின்வடங்களால் பாதசாரிகள் பீதி

புகார் பெட்டி - நடைபாதையில் விபத்து அபாய மின்வடங்களால் பாதசாரிகள் பீதி

அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டு திருமங்கலம் பகுதியில், பள்ளி சாலை உள்ளது. இப்பகுதியில், திருமங்கலம் காவல் நிலையம், தனியார் பள்ளிகள், மாற்றுத்திறனாளி பள்ளி உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இச்சாலையை கடந்து, பள்ளிகளுக்கும், மேற்கு அண்ணா நகர் பேருந்து நிலையத்திற்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், நடைபாதை தடுப்புகள் சேதமடைந்து கிடக்கின்றன. அதிக மின் அழுத்த உடைய ராட்சத மின்வடங்கள், நடைபாதை தடுப்பு கம்பிகளில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.இதனால், விபத்து அபாயம் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.- சங்கவிதிருமங்கலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ