புகார் பெட்டி - சோமங்கலத்தில் ஏ.டி.எம்., மையம் செயல்படுமா?
-குன்றத்துார் ஒன்றியம், சோமங்கலம் ஊராட்சியில், பேருந்து நிலையம், காவல் நிலையம், பழமை வாய்ந்த சுந்தரராஜ பெருமாள் கோவில், வணிக கடைகள், குடியிருப்புகள் உள்ளன.இங்கு, காவல் நிலையம் அருகே உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதனால், பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். சோமங்கலத்தில் ஒரு ஏ.டி.எம்., மையமே உள்ள நிலையில், அதுவும் இரு மாதங்களாக இயங்காததால், சிரமமாக இருக்கிறது.ராகேஷ், சோமங்கலம்