புகார் பெட்டிசாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்படுமா
சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்படுமா?
மேற்கு கூவம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைக்காததால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட மேற்கு கூவம் சாலை - டேம்ஸ் சாலை சந்திப்பில் இரு தினங்களுக்கு முன் பள்ளம் ஏற்பட்டது. அவற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுக்கவில்லை.இதனால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி, வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதை அறிந்த போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படாத வண்ணம் பிளாஸ்டிக் தடுப்புகளை அமைத்துள்ளனர். விபத்து ஏற்படும் முன் சாலையில் விழுந்த பள்ளத்தை மாநகராட்சியினர் சீரமைக்க வேண்டும்.- க. பரந்தாமன், ராயபுரம்.