உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி:மருத்துவ முகாம் சிகிச்சையில் குளறுபடி

புகார் பெட்டி:மருத்துவ முகாம் சிகிச்சையில் குளறுபடி

மருத்துவ முகாம் சிகிச்சையில் குளறுபடி

பெரும்பாக்கம் வாரிய குடியிருப்பில், ஒரு வாரத்திற்குமுன் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில், சிலரை மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். ஆனால், போதிய வழிகாட்டுதல் வழங்கவில்லை. 'அனைத்து அரசு மருத்துவமனையிலும், அனைத்துவித நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதில்லை. எந்த சிறப்பு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கேட்டால், கேட்டு சொல்கிறோம்' என, சுகாதார அதிகாரிகள் கூறினர். 10 நாட்கள் ஆகியும், பதில் கூறவில்லை. மீண்டும் கேட்டால், குரோம்பேட்டை அல்லது ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என, அலட்சியமாக பதில் கூறினர். மருத்துவ முகாம் கணக்கு காட்ட நடத்தினரா என சந்தேகம் எழுகிறது.- காமாட்சி, பெரும்பாக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை