ரூ.1 கோடி வரதட்சணை கேட்ட கணவர் மீது புகார்
சென்னை திருமணமான ஒரே ஆண்டில், 1 கோடி ரூபாய் வரதட்சணை கேட்டு கணவர் சித்தரவதை செய்வதாக மனைவி, திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, 25 வயது இளம்பெண் புகார் அளித்தார். புகாரில், 'முகப்பேர் பகுதியைச் சேர்ந்த பிரவின்குமார், 28 என்பவரை பெற்றோர் ஆசிர்வாதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். வரதட்சணையாக, 60 சவரன் நகை மற்றும் சீர்வரிசை என் பெற்றோர் கொடுத்தனர். 'தற்போது 1 கோடி ரூபாய் வரதட்சணை கேட்டு என் கணவர் தினசரி சித்தரவதை செய்து வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என' குறிப்பிட்டுள்ளார். மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.