உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதை ஆக்கிரமிப்பால் ராமாபுரத்தில் தொடரும் நெரிசல்

நடைபாதை ஆக்கிரமிப்பால் ராமாபுரத்தில் தொடரும் நெரிசல்

ராமாபுரம், ராமாபுரம், வளசரவாக்கம் மண்டலம், 155வது வார்டு ராமாபுரத்தில், வள்ளுவர் சாலை உள்ளது. இது வளசரவாக்கம், ராமாபுரம், மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இச்சாலையின் இருபுறமும் உணவகங்கள், பேக்கரி, பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் அதிகம் உள்ளன. இக்கடைகளின் உரிமையாளர்கள், சாலையோர நடைபாதையை ஆக்கிரமித்து, பொருட்களை விற்பனைக்காக குவித்து வைக்கின்றனர். இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கு, பழைய பொருட்களை வாங்குவதற்கும், விற்பனை செய்யவதற்கும் லோடு ஆட்டோக்கள் வருகின்றன. இவை சாலையோரம் நிறுத்தப்படுவதால், 'பீக் ஹவர்'களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இச்சாலையின் இருபுறம் நிறுத்தப்பட்ட கார்களால், நேற்று முன்தினம் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்ய மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை