கட்டுமான பொருள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் இன்று நிறைவு
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்து வரும் கட்டடத் துறையின் மிக முக்கிய நிகழ்வான, 'பில்ட்' கட்டடப் பொருள் கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.இந்த கண்காட்சியில், 70க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டட உருவாக்கத்தின் உயிர்நாடியான, 'ஆர்க்கிடெக்சர்', 'பில்டிங், இன்டீரியர்' ஆகிய துறைகளுக்கான முக்கிய பொருட்கள், கருவிகள், சாதனங்கள், புதிய தொழில்நுட்பங்கள், கட்டுமான முறைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அதிநவீன உள்கட்டமைப்பு தேவைகளுக்கு பயன்படும் கட்டுமான சாதனங்கள், இயந்திரங்கள், கட்டுமான உபயோகத்திற்கான வாகனங்கள் போன்றவை, பார்வையாளர்களை கவர்ந்தன.குறிப்பாக, நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களும், சர்வதேச தரம் வாய்ந்த எலக்ட்ரானிக் டோர்ஸ், உள் மற்றும் வெளி அலங்காரப் பொருட்கள், மாடுலர் கிச்சன் பிரிவு, ஐரோப்பாவின் முப்பரிமாண கதவுகள் வரவேற்பை பெற்றன.கண்காட்சியின் கடைசி நாளான இன்று, காலை 10:00 மணி முதல், மாலை 6:30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.