மேலும் செய்திகள்
ஈரோடு ப.செ.பார்க்கில் பசுமை பந்தல் அமைப்பு
02-May-2025
ஈரோடு ப.செ.பார்க்கில்பசுமை பந்தல் அமைப்பு
01-May-2025
உடுப்பி கிருஷ்ணர் எப்படிக் கிடைத்தார்?
23-Apr-2025
ஐ.சி.எப்., நியூ ஆவடி சாலையில், நேற்று அதிகாலை கன்டெய்னர் லாரி ஒன்று, ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து வெளியில் வந்தது. சிக்னலில் வலது பக்கமாக திரும்பும்போது, வெயிலுக்காக அமைத்திருந்த பசுமை பந்தல் மீது மோதியது.இதில், சாலை தடுப்பில் இருந்த பசுமை பந்தலின் இரும்பு கம்பி வலைந்து, பந்தல் சாலையில் சாய்ந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஐ.சி.எப்., போக்குவரத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து, திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மனா சபீர்கான், 44 என்பதும், ஐ.சி.எப்., தொழிற்சாலைக்கு பொருட்களை இறக்கிவிட்டு சென்றபோது, விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது. மாநகராட்சி ஊழியர்கள், சேதமடைந்த பசுமை பந்தலை அகற்றினர்.
02-May-2025
01-May-2025
23-Apr-2025