உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழில் துவங்க கடன் பெற்றவரிடம் லஞ்சம்: கூட்டுறவு சங்க செயலர் கைது

தொழில் துவங்க கடன் பெற்றவரிடம் லஞ்சம்: கூட்டுறவு சங்க செயலர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: தொழில் தொடங்க அடமான கடன் பெற்றவரிடம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வங்கி செயலாளர், கணக்காளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர், ஹோட்டல் தொழில் செய்வதற்காக, பெற்றோர் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை, திருவள்ளூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடமானம் வைத்து, கடன் பெற அணுகினார். கடன் வழங்குவதற்கான நடவடிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, கடந்த 27ம் தேதி சிவகுமாரின் தந்தை பெயரில், 11.76 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.அப்போது, கூட்டுறவு சங்க செயலர் ராமலிங்கம், 17,000 ரூபாயை, கணக்காளர் ஏகாம்பரத்திடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது, சிவகுமார், கணக்காளர் ஏகாம்பரத்திடம் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கூறிய போது, அவர் 15,000 ரூபாய் கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவகுமார், திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். டி.எஸ்.பி கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று, ரசாயனம் தடவிய பணத்தை சிவகுமாரிடம் கொடுத்தனர்.அந்த பணத்தை செயலர் ராமலிங்கம் அறிவுறுத்தல்படி, கணக்காளர் ஏகாம்பரத்திடம் அளித்தபோது, கையும் களவுமாக கைது செய்தனர். இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sampath Kumar
மார் 30, 2025 11:37

ஊழல் லஞ்சம் இதை நிறுத்த முடியாது?


M Ramachandran
மார் 30, 2025 10:38

பக்த வச்சலம் ஐயா அவர்கள் பெரும் பரம்பரை பணக்காரர்கள். எளிமையானவர். அவர் ஷட்டகர் அழகேசன் ரயில்வே துறைய் இணை அமைச்சராக இருந்தார். அவர் நம் தமிழ் நாட்டிற்கு அப்போது மீட்டர் - கேஜ் தாம்பரம்- விழுப்புரம் மின் மயமாக்க உதவினார். அது மட்டு மெல்ல செங்கல்பட்டு - மகாபலிபுரம் பழைய GST ரோடு மெடிக்கல் காலேஜூ வரைய அவர் நிலம் தான். அரசு கல்லூரி கட்ட தன் நிலத்தை வழங்கினார். அப்பேர் பட்டவரைய நம் ஸ்டாலினின் அப்பா கருணாநிதி முதலியானோர் அரியலூர் அழகேச ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா என்று தூற்றி கோசம் எழுப்பினார்கள் உண்மையில் அந்த விபத்துக்கான காரணம் தமிழ் நாடு அரசு. அரியலூர் அருகில் ஓடும் மருதையாறு ஒரு காட்டாறு. அந்த பகுதியில் பெரம்பலூர் மலை களிலிருந்து பெய்த மழை காரணமாக வந்த காட்டாற்று வெள்ளம் அரியலூர் அருகிலிருந்த கிராமத்திற்கு அருகில் இருந்த குளம் நிரம்பி ஊருக்குள் வரும் அபாயம் கண்டு VAO உத்தரவின் பேரில் கரையாய் உடைத்து மருதையாற்றில் கலக்கும் படி செய்தார்கள். இது விவரம் VAO அருகிலிருந்த அரியலூர் ரயில் நிலையத்திற்கு தெரிவித்திருக்க வேண்டும் செய்ய வில்லை. அது காரணமாக பெரும் விபத்து நேர்ந்தது. விபத்து கூட ரயில் பாலத்தில் ஏற்பட வில்லை. பாலம் கடந்து மண்ணினால் அணைப்பு கட்டியிருந்ததை காட்டாற்று வெள்ளம் அடித்து சென்று விட்டது. இந்தக்கும்பல் போனால் காங்கரஸ் காரர்களுக்கு அடுக்கு மொழியில் பேராசை தெரியாது. எதார்த்த வாதிகள்.


Amar Akbar Antony
மார் 30, 2025 09:10

எனக்கு தெரிந்து ஒரு மாவட்ட தொழில்துறை சம்பந்தப்பட்ட அதிகாரி ஓபன் டாக்காக ஒரு சப்சிடி அனுமதிக்க இருபத்தைந்து விழுக்காடு கேட்டிருந்தார் காரணம் அவர் சென்னை செல்கிறார் மந்திரிக்கு கொடுக்கவேண்டும். ஆக இது கழகங்களின் திராவிட ஆட்சியன்றி வேறில்லை. நினைத்துப்பார்க்கிறேன் காமராஜர் என்ற தமிழர் பக்தவச்சலம் என்ற தமிழர் ஆண்டபோது இல்லாத இந்த இலஞ்சப்பேர்வழிகள் அரசு ஊழியர்கள் எப்படி தரம் தாழ்ந்து கேவலப்பட்டு புச்சைக்காரர்களை காட்டிலும் பிச்சைஎடுத்து குடும்பத்த வளர்த்துகிறார்கள். உருப்படாத த்ராவிடர்கள்.


B N VISWANATHAN
மார் 30, 2025 08:57

நேற்றைய போக்சோ தலையங்கம் மாதிரி, நேற்றைய லஞ்சம் கைது செய்தி வேண்டும்


Anand
மார் 30, 2025 08:43

Editor Dinamalar, of late you have been publishing the details of persons booked under POCSO on a daily basis. Similarly, kindly publish the list of government staff booked under corruptions on daily basis


Venkateswaran Rajaram
மார் 30, 2025 08:27

மகன் தொழில் செய்வதற்காக தந்தையின் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்குகிறார்.. இந்த ஈனப் பிறவிகள் ஏதோ இவர்கள் அப்பன் வீட்டு பணத்தை கொடுத்தது போல லஞ்சம் கேட்கின்றனர்.. அடுத்தவர் ரத்தத்தை உறிஞ்சி வாழும் ஈனப்பிறவிகள்...


அப்பாவி
மார் 30, 2025 08:07

இந்த மூஞ்சியெல்காம் பாத்தாலே ஃப்ராடு மாறி இருக்கே. எவன் வேலை குடுத்தானோ?


நிக்கோல்தாம்சன்
மார் 30, 2025 08:04

வங்கி கடன் லஞ்சம் வாங்கியிருப்பதால் திருப்பி செலுத்த வேண்டாமா காசாளரே, என்ன விடியல் மாடல் இது ஸ்டாலின் சார்


மூர்க்கன்
மார் 30, 2025 08:21

முகத்தை பார்த்தால் தெரில இது குசராத் கேடி மாடல் என நினைத்து மாட்டிகிட்டார் ?? நடப்பது விடியல் அரசு என விளங்கி கொள் கிரிப்டோ ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை