உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பவள வண்ண பெருமாள் நாளை திருத்தேரில் உலா

பவள வண்ண பெருமாள் நாளை திருத்தேரில் உலா

திருவொற்றியூர்,திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், பிரமோத்சவம், 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான கருட சேவை, 13ம் தேதி அதிகாலை விமரிசையாக நடந்தேறியது.நேற்று காலை, உற்சவர் பவள வண்ண பெருமாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், நாச்சியார் கோலத்தில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார்.விழாவின், மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், நாளை காலை 6:00 மணிக்கு நடக்கிறது.இதில், 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், நிர்வாகம் தரப்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 19ம் தேதி, தீர்த்தவாரி, கொடி இறக்கத்துடன் பிரமோத்சவம் நிறைவுறும். அதை தொடர்ந்து, ஆறு நாட்கள் விடையாற்றி உத்சவம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ