உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கொரோனா அசால்ட்டர்ஸ் அணி கிரிக்கெட் போட்டியில் வெற்றி

 கொரோனா அசால்ட்டர்ஸ் அணி கிரிக்கெட் போட்டியில் வெற்றி

சென்னை: ப்ளூ ஸ்கை கிரிக்கெட் லீக் போட்டியில், கொரோனா அசால்ட்டர்ஸ் அணி 119 ரன்கள் வித்தியாசத்தில், டைகர் சி.சி., ரீயுனைடட் அணியை தோற்கடித்தது. ப்ளூ ஸ்கை கிரிக்கெட் லீக் போட்டிகள், சேத்துப்பட்டில் நடக்கின்றன. ஒன்பது அணிகள், தலா எட்டு போட்டிகளில் விளையாடி வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த கொரோனா அசால்ட்டர்ஸ் அணி, 25 ஓவர்களை முழுமையாக விளையாடி, ஏழு விக்கெட் இழந்து, 175 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய டைகர் சி.சி., ரீயுனைடட் அணி, அசால்ட்டர்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்கவே முடியவில்லை. விக்கெட்கள் பனித்துளி போல விழ, 21.4 ஓவர்களில் 56 ரன்களிலே, ஆல் அவுட் ஆனது. இதனால், 119 ரன்கள் வித்தியாசத்தில், கொரோனா அசால்ட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை