உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி ஊழியர்கள் கிரிக்கெட் வடக்கு வட்டார ஆபீஸ் அணி வெற்றி

மாநகராட்சி ஊழியர்கள் கிரிக்கெட் வடக்கு வட்டார ஆபீஸ் அணி வெற்றி

சென்னை, சென்னை மாநகராட்சி ஆண்டு விளையாட்டு போட்டிகள், கடந்த 10ம் தேதி முதல், நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. போட்டிகளில், பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என, 2,416 பேர் பங்கேற்றுள்ளனர்.நேற்று முன்தினம், மைலேடி பூங்காவில் நடந்த நீச்சல் 'ரிலே' போட்டியில், சோழிங்கநல்லுார் மண்டல அலுவலர் ராஜசேகர் தலைமையிலான அணி முதலிடத்தை பிடித்தது.அதேபோல், 50 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 மீ., நீச்சல் போட்டியில் சபாபதி முதலிடத்தையும், ராஜசேகர் மற்றும் முத்தையா இரண்டாமிடத்தையும், மூர்த்தி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.நேற்று காலை, பெரியமேடு, கண்ணப்பர் திடல் மற்றும் ஷெனாய் நகர் கிரசன்ட் மைதானத்தில், ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டிகளில், 47 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.கண்ணப்பர் திடலில் நடந்த போட்டியில், வடக்கு வட்டார அலுவலகம் மற்றும் மண்டலம் - 4 காலரா மருத்துவமனை அணிகள் எதிர்கொண்டன.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வடக்கு வட்டார அலுவலக அணி, நிர்ணயிக்கப்பட்ட ஆறு ஓவர்களில், ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு, 45 ரன்களை அடித்தது.அடுத்து பேட்டிங் செய்த மண்டலம் - 4 காலரா மருத்துவமனை அணி, 6 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு, 26 ரன்களை அடித்து தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி