உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உர்பேசர் ஸ்மித் நிறுவனத்தின் குப்பை அகற்றும் பணி படுமோசம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

உர்பேசர் ஸ்மித் நிறுவனத்தின் குப்பை அகற்றும் பணி படுமோசம் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கோடம்பாக்கம்:கோடம்பாக்கம் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது.இதில், மண்டல உதவி கமிஷனர் முருகேசன், செயற்பொறியாளர் பெரியசாமி, இனியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்று, நிறைவேற்றப்பட்ட, 22 தீர்மானங்கள் குறித்தும் வார்டின் அடிப்படை தேவைகள் குறித்தும் பேசினர்.கவுன்சிலர்கள் பேசியதாவது:உமா ஆனந்தன், 134வது வார்டு பா.ஜ., கவுன்சிலர்:மேற்கு மாம்பலத்தில் பல இடங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், பலர் தொற்று நோயால் அவதிப்பட்டுள்ளனர். எனவே, கழிவுநீர் கலப்பை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்து, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்கர், 130வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: கங்கையம்மன் கோவில் தெரு, அழகிரி நகர் 3 மற்றும் 5வது தெரு, வள்ளியம்மை தெரு உள்ளிட்ட தெருக்களில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குமரன் காலனி பிரதான சாலையில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி வருகிறது. அச்சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து துவங்க வேண்டும்.லோகு, 127வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:கோயம்பேடு பகுதியில் துாய்மை பணி மேற்கொள்ளும் 'உர்பேசர் ஸ்மித்' நிறுவனம் சார்பில் பிரதான சாலைகளில் உள்ள மண் துாசிகள் அகற்றப்படுவதில்லை. இதனால் புழுதி மண்டலமாக மாறி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இது குறித்து கேட்டால், இதற்கான வாகனம் பழுது என, தெரிவிக்கின்றனர்.அதேபோல, பல இடங்களில் குப்பை கொட்டப்பட்டு மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இதை உர்பேசர் ஊழியர்கள் முறையாக அகற்றுவதில்லை.உணவகங்களில் உள்ள குப்பையை அகற்றிவிட்டு, அதற்கு பின் தான் சாலையில் உள்ள குப்பையை அகற்றுகின்றனர்.கோயம்பேடில் உள்ள ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., குடியிருப்பு அதிகாரிகளுக்கு பணி செய்யவே, எனது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர். உயர் அதிகாரிகள் சொல்வதை கீழ் உள்ள அதிகாரிகள் தட்ட முடியாத நிலை உள்ளது. இதனால், வார்டின் பணிகள் பாதிக்கப்படுகின்றன.ராஜா 129வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:விளையாட்டு திடல் மற்றும் பூங்காக்கள்ள பொலிவிழந்து காணப்படுகிறது. காமராஜர் சாலை, குமரன்காலனி 2வது குறுக்கு தெரு, அண்ணா தெரு உள்ளிட்ட பகுதிகளில் புது மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.விருகம்பாக்கம் பகுதியில் 'உர்பேசர் ஸ்மித்' நிறுவனத்த்ால் சரியாக பணி செய்வதில்லை. இதனால், ஆங்காங்கே குப்பை தேங்கி உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை