உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கண்ணகி நகர் அ.தி.மு.க., கவுன்சிலர் ஆபீசில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

கண்ணகி நகர் அ.தி.மு.க., கவுன்சிலர் ஆபீசில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

கண்ணகி நகர்: கண்ணகி நகரில் உள்ள, மாநகரட்சி 196வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தில், மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினர். பணியாளர்கள் பணி முடிந்து வீட்டிற்கு சென்றதால், அவர்கள் தப்பினர் சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு அலுவலகம் கண்ணகி நகரில் உள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த அஸ்வினி, கவுன்சிலராக உள்ளார். இரண்டடுக்கு கொண்ட இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில், துாய்மை பணியாளருக்கான அலுவலகம், முதல் தளத்தில் கவுன்சிலர் அலுவலகம் உள்ளது. ஆய்வு நேற்று மாலை, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், வார்டு அலுவலகத்தில், இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இதில், சுவரில் இருந்த டியூப் லைட், முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் சேதமடைந்தன. இந்த அலுவலகத்தில் துாய்மை மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் இருப்பர். வெடிகுண்டு வெடித்த நேரத்தில், அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டதால் அவர்கள் தப்பினர். கண்ணகி நகர் போலீசார், சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, வெடிகுண்டு வீசி தப்பி சென்றவர்கள் குறித்து விசாரித்தனர். அதில், நாட்டு வெடிகுண்டுகளை வீசியது, அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், 24, செந்தில், 20, விஷ்வா, 21, என்பது தெரிந்தது. நோக்கம் இவர்கள், வார்டு அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி செல்லும்போது, இவர்களின் எதிரியான பிரவீன் ஆண்டனி, 22, என்பவரை, அரிவாளால் வெட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், கவுன்சிலரின் தந்தையும், அ.தி.மு.க.,வை சேர்ந்த பகுதி செயலருமான கர்ணா, என்னை குறி வைத்து நாட்டு வெடிகுண்டு வீசியதாக, போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாகவும், போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வார்டு அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள வாரிய குடியிருப்பில், அ.தி.மு.க., பகுதி செயலர் கர்ணாவின் கட்சி அலுவலகம் உள்ளது. அங்கு வெடிகுண்டு வீச வந்து, தவறுதலாக வார்டு அலுவலகத்தில் வீசியிருக்கலாம் என, கூறப்படுகிறது. வார்டு அலுவலகத்தில் வெடிகுண்டு வீச வேண்டிய நோக்கம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில், போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், கவுன்சிலர் அஸ்வினி உள்ளிட்டோரிடமும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை