மேலும் செய்திகள்
ஆயுர்வேத மசாஜ் சென்டரில் 10 பேர் கைது
09-Jun-2025
சென்னை,:ஓட்டேரியைச் சேர்ந்தவர் சார்லஸ், 50. இவர், கொருக்குப்பேட்டையில் மரக்கடை நடத்தி வருகிறார். உடல் அசதிக்காக, மாதம் இருமுறை மசாஜ் சென்டர்களுக்கு சென்று வருவது வழக்கம்.அந்த வகையில், மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா, 38, என்பவர் பழக்கமாகி உள்ளார்.கடந்த மாதம், 29ம் தேதி காலையில், சார்லஸை தொடர்பு கொண்ட ஆண்ட்ரியா, சூளைமேடு பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வரும், தோழி ரேகாவின் மொபைல் போன் எண்ணை கொடுத்துள்ளார்.இதையடுத்து, சார்லஸ் ரேகாவை தொடர்பு கொண்டுள்ளார். பின், அங்கு சென்ற சார்லஸை 60 வயதான ரேகா வரவேற்று உள்ளார்.பின், ரேகாவும், அவரது பேரனுமான நவீன்குமார், 23, ஆண்ட்ரியாவின் கணவர் கோகுலகிருஷ்ணன், 40, ஆகியோர் சேர்ந்து, சார்லைஸ தாக்கி 40,000 ரூபாய் மற்றும் செயின், பிரேஸ்லெட் என, 20 சவரன் நகையை பறித்து தப்பினர்.இது குறித்து, சூளைமேடு போலீசார் விசாரித்தனர். அப்போது, இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ஆண்ட்ரியா என்பது தெரியவந்தது.தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் பதுங்கி இருந்த ரேகா மற்றும் நவீன்குமார், சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 2.85 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஆண்ட்ரியா மற்றும் அவரது கணவரை தேடி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், கோடம்பாக்கத்தில் உள்ள சகோதரியை மொபைல் போன் வாயிலாக கோகுலகிருஷ்ணன் தொடர்பு கொண்டுள்ளார்.இதையறிந்த தனிப்படை போலீசார், கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பதுங்கி இருந்த, இருவரையும், நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 11.25 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
09-Jun-2025