மேலும் செய்திகள்
சாலையோரத்தில் இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை
28-Nov-2025
குன்றத்துார்: காதல் திருமணம் செய்த பத்தே நாட்களில், புதுமணத் தம்பதி வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய், 25. அம்பத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருடன் பணியாற்றிய திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ, 24, என்பவரை, இரண்டு ஆண்டுகளாக காதலித்து, கடந்த 13ம் தேதி திருமணம் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hbchoywh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருமணத்திற்குப் பின், இருவரும் குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், யுவஸ்ரீயை மொபைல் போனில் போரூரில் உள்ள அவரது சகோதரி தொடர்புகொண்டார். பலமுறை அழைத்தும் போனை எடுக்காததால், நேற்று இரவு குன்றத்துார் அருகே உள்ள யுவஸ்ரீயின் வீட்டிற்கு சென்று பார்த்தார்.அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. கதவை தட்டியும், நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்தவர், குன்றத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, யுவஸ்ரீ கட்டிலில் இறந்து கிடந்தார். விஜய், அதே அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். யுவஸ்ரீயின் உடலில் காயங்கள் இல்லாத நிலையில், அவரது முகத்தின் அரு கே தலையணை இருந்துள்ளதால், யுவஸ்ரீயின் முகத் தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து, விஜய் தற்கொலை செய்திருக்கலாம் என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, இருவரின் உடல்களையும் போலீசார், பிரேத பரிசோதனைக்கு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர். காதல் தி ருமணம் செய்து கொண்ட பத்தே நாட்களில், காதல் ஜோடி மர்மமான முறையில் இறந்தது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28-Nov-2025