மேலும் செய்திகள்
மழைக்கு 10 மாடுகள் உயிரிழப்பு
22-Oct-2025
வானகரம்: மின் கம்பி அறுந்து விழுந்ததில், பசு மற்றும் கன்றுக்குட்டி மின்சாரம் பாய்ந்து, பரிதாபமாக பலியாயின. வானகரத்தை அடுத்த நுாம்பல் கண்ணபிரான் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 55. இவர், கறவை மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று மாலை பசு மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை, மேய்ச்சலுக்காக துண்டலம், அண்ணா நகர் பிரதான சாலை வழியாக ஓட்டி சென்றார். துண்டலம் ஏரிக்கரை தெரு, மாநகராட்சி பூங்கா அருகே, அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை பசு மிதித்துள்ளது. இதில், பசு மாடு ஒன்றும் ஒரு கன்று குட்டியும், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அய்யப்பன்தாங்கல் மின்வாரிய அதிகாரிகள், மின் கம்பியை சீர் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
22-Oct-2025